சோளங்கன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஏற்ப்பாட்டில் சோளங்கன் முன்பள்ளி மாணவர்களதும், சோளங்கன் கிராம மாணவர்களதும் கலைவிழா நிகழ்ச்சி 18.10.2014 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்களின் உதவியுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் போது பிரதம விருந்தினர், கௌரவ விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்களை சோளங்கன் நிர்வாகத்தினர் மாலையணிவித்து, தொடர்ந்து முன்பள்ளி மாணவர்கள் பான்ட் வாத்திய இசையுடன் வரவேற்பதையும் தொடர்ந்து விருந்தினர்கள் மங்கல விளக்கு ஏற்றுவதனையும் படத்தில் காணலாம். தொடர்ந்து திரு.ப.நிலாங்கதன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடாத்துவதனையும், நிலையத் தலைவர் திரு.தி.திருவாவூரன் தலைமை உரையாற்றுவதையும் தொடர்ந்து முன்பள்ளி மாணவர்களும், சோளங்கன் கிராம மாணவர்களும் கலை நிகழ்ச்சிகளை செய்வதனையும், நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், புலமைப்பரீட்சை, பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்கள் பிரிசில்கள் வழங்குவதனையும் தொடர்ந்து விருந்தினர்களுக்கு எமது நிலையம் சார்பாக நினைவுப்பரிசல்கள் வழங்குவதனையும் படத்தில் காணலாம்.