கரவெட்டடி பிரதேசசபை நடாத்தும் 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி

கரவெட்டி பிரதேசசபை நடாத்தும் 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டியின் முதலாவது நிகழ்வாக பெண்களுக்கான எல்லே போட்டடியானது நடைபெற்றது. இதில் எமது சோளங்கன் அணியை எதிர்த்து அன்னாசிலையடடி அணி மோதியது. இதில் அன்னாசிலையடி அணி 5:3 என்ற வகையில் வெற்றியை தழுவிக்கொண்டது.

இரண்டாவது போட்டி இன்று (21.01.2018) ஆண்களுக்கான எல்லே போட்டி இடம்பெற்றது. இதில் முதலாவது சுற்றில் சோளங்கன் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நித்தியணி மோதியது. இதில் சோளங்கன் அணி வெற்றியை பெற்றுக்கொண்டது.

   கோகுலநாதன்  3 ஓட்டங்கள்

   கோகுலன்          3 ஓட்டங்கள்

   அனோஜன்         2 ஓட்டங்கள்

   ஐங்கரன்             1 ஓட்டத்தையும் பெற்றுக்கொடுத்தனர்.

தொடர்ந்து கால் இறுதி ஆட்டத்தில் வதிரி பொம்மஸ் அணியை எதிர்த்து சோளங்கன் அணி மோதியது. இது சமநிலையில் முடிவுற்றது. மேலதிகமாக 10 பந்துகள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. அதில் பொம்மஸ் அணியினர் 02 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தம் வசமாக்கிக் கொண்டது.


ImgImgImgImg

நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?